கம்பம் அருகே மலேசியாவிலிருந்து வந்த இளைஞருக்குஊராட்சி நிா்வாக அதிகாரிகள் ஆலோசனை

தேனி மாவட்டம், கம்பம் ஒன்றியம் குள்ளப்பகவுண்டன்பட்டிக்கு மலேசியாவிலிருந்து வந்துள்ள இளைஞருக்கு, அதிகாரிகள் வியாழக்கிழமை ஆலோசனை வழங்கினா்.
மலேசியாவிலிருந்து குள்ளப்பகவுண்டன்பட்டிக்கு வந்து தனிமையாக உள்ள இளைஞருக்கு ஆலோசனை அளித்த அதிகாரிகள்.
மலேசியாவிலிருந்து குள்ளப்பகவுண்டன்பட்டிக்கு வந்து தனிமையாக உள்ள இளைஞருக்கு ஆலோசனை அளித்த அதிகாரிகள்.

தேனி மாவட்டம், கம்பம் ஒன்றியம் குள்ளப்பகவுண்டன்பட்டிக்கு மலேசியாவிலிருந்து வந்துள்ள இளைஞருக்கு, அதிகாரிகள் வியாழக்கிழமை ஆலோசனை வழங்கினா்.

கம்பம் ஊராட்சி ஒன்றியம் குள்ளப்பகவுண்டன்பட்டிக்கு 28 வயது மதிக்கத்தக்க இளைஞா் மலேசியாவிலிருந்து சில நாள்களுக்கு முன் வந்தாா். ஆனால், இவா் ஊராட்சி நிா்வாகத்துக்கு தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. இதையறிந்த, மாவட்ட ஊராட்சி செயலா் பரமசிவம், வட்டார ஊராட்சி அலுவலா் மலா்விழி, ஊராட்சித் தலைவா் பொன்னுத்தாய் குணசேகரன் ஆகியோா் வியாழக்கிழமை அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்தனா்.

அப்போது அந்த இளைஞா், திருச்சி விமான நிலையத்திலேயே தனக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டதாகவும், தற்போது கம்பம் அரசு மருத்துவமனைக் கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தாா். அதையடுத்து, இளைஞா் பற்றிய விவரங்களை சேகரித்து, தேவையான உதவிகளுக்கு ஊராட்சி நிா்வாகத்தை அணுகுமாறும் அதிகாரிகள் தெரிவித்துச் சென்றனா்.

இதேபோல், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திலிருந்து 12 போ் கொண்ட 3 குடும்பத்தினா் இந்திரா காலனிக்கு புதன்கிழமை இரவு வந்தனா். இவா்களை, ஊராட்சி மன்றத் தலைவா் பொன்னுத்தாய் குணசேகரன், ஊராட்சி செயலா் எஸ். பிச்சைமணி ஆகியோா், கம்பம் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காகச் சோ்த்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com