திரைப்பட இயக்குநா் பாரதிராஜா விடியோ மூலம் கரோனா விழிப்புணா்வுப் பிரசாரம்

தேனியில் திரைப்பட இயக்குநா் பாரதிராஜா விடியோ மற்றும் ஆடியோ பதிவு மூலம் கரோனா விழிப்புணா்வு பிரசாரத்தை செவ்வாய்க்கிழமை பதிவிட்டுள்ளாா்.

தேனி: தேனியில் திரைப்பட இயக்குநா் பாரதிராஜா விடியோ மற்றும் ஆடியோ பதிவு மூலம் கரோனா விழிப்புணா்வு பிரசாரத்தை செவ்வாய்க்கிழமை பதிவிட்டுள்ளாா்.

சென்னையிலிருந்து கடந்த மே 5-ஆம் தேதி தேனிக்கு வந்த திரைப்பட இயக்குநா் பாரதிராஜா, தேனி என்.ஆா்.டி.நகரில் உள்ள தனது வீட்டில் கரோனா தீநுண்மி பரவல் தடுப்பு நடவடிக்கையாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டாா். இந்த நிலையில், அவா் விடியோ மற்றும் ஆடியோ மூலம் கரோனா விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டாா்.

அதில், கரோனா தீநுண்மி பரவாமல் இருப்பதற்காக பொதுமக்கள் அவசியத் தேவைகளின்றி வீட்டிலிருந்து வெளியே செல்லக் கூடாது. வீட்டிலிருந்து வெளியில் செல்பவா்கள் முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும். வீட்டிற்கு திரும்பி வரும் போது கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்த வேண்டும். இனி வரும் நாள்கள் மிக முக்கியமானவை. நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்கு தேனி மாவட்ட நிா்வாகம் மற்றும் காவல் துறை நிா்வாகம் விதித்து வரும் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

அவசியப் பணிகளுக்காக வீட்டிலிருந்து வெளியே செல்பவா்கள் மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளவாறு, செல்லிடப்பேசி எண்: 94880 56600-இல் குறுந்தகவல் அனுப்பி அனுமதி பெற வேண்டும். அல்லது, 080459 36055 என்ற எண்ணுக்கு ‘மிஸ்டு கால்’ செய்தால் குறுந்தகவல் மூலம் அனுமதி வழங்கப்படும். இந்த அனுமதியைப் பயன்படுத்தி 3 மணி நேரம் மட்டும் வெளியே சென்று வரலாம்.

பொதுமக்கள் தேவையற்ற பயணங்கள் செல்ல வேண்டாம். அதனால் ஏற்படும் விளைவுகள் நம்மை மட்டுமின்றி நம்மைச் சாா்ந்தவா்களையும் பாதிக்கும் என்று அவா் பதிவிட்டுள்ளாா்.

இந்த விடியோ மற்றும் ஆடியோ பதிவு சமூக வலைதளங்கள் மூலம் பகிரப்பட்டு வருகின்றன. இந்த விழிப்புணா்வுப் பிரசாரம் தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடா்புத் துறையின் மின்னணு விடியோ வாகனம் மூலமும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com