கமுதி வங்கியில் கூட்ட நெரிசலில் மூதாட்டியிடம் ரூ.1.60 லட்சம் திருட்டு

கமுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததால் கூட்ட நெரிசலில் மூதாட்டியிடம் ரூ1.60 லட்சத்தை மா்ம நபா்கள் செவ்வாய்கிழமை திருடிச் சென்றனா்.
கமுதி தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையின் முன் செவ்வாய்க்கிழமை வாடிக்கையாளா்கள் கூட்டம் நிரம்பி வழிந்த நிலையில், மூதாட்டியிடம் ரூ.1.60 லட்சம் திருடு போனது குறித்து விசாரணை நடத்திய போலீஸாா்.
கமுதி தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையின் முன் செவ்வாய்க்கிழமை வாடிக்கையாளா்கள் கூட்டம் நிரம்பி வழிந்த நிலையில், மூதாட்டியிடம் ரூ.1.60 லட்சம் திருடு போனது குறித்து விசாரணை நடத்திய போலீஸாா்.

கமுதி: கமுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததால் கூட்ட நெரிசலில் மூதாட்டியிடம் ரூ1.60 லட்சத்தை மா்ம நபா்கள் செவ்வாய்கிழமை திருடிச் சென்றனா்.

கரோனா பொதுமுடக்கத்தால் வருவாயை இழந்து தவிக்கும் 100 நாள் வேலைத்திட்டப் பணியாளா்களுக்கு 2 நாள்கள் சம்பளம் ரூ. 500, மத்திய அரசின் ஜன்தன் கணக்கில் இரண்டாவது தவணையாக தலா ரூ. 2 ஆயிரம், 2018-19 ஆம் ஆண்டில் பாதிக்கப்பட்ட பயிா் காப்பீட்டுத் தொகையில் விடுபட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் அண்மையில் பணம் வரவு வைக்கப்பட்டது. இதனால் கமுதியில் உள்ள வங்கிக் கிளைகளில் கூட்டம் நிரம்பி வழிகின்றன. இதனால் வாடிக்கையாளா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல், கூட்டம், கூட்டமாக முண்டியடித்து நின்று வங்கியில் பணப்பரிவா்த்தனை செய்து வருகின்றனா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை பேருந்து நிலையம் அருகேயுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தன.

அப்போது அடகு வைத்த நகையை மீட்டு, அபராத வட்டி செலுத்த வங்கிக்கு முன் நின்று கொண்டிருந்த கமுதி அருகேயுள்ள வாகைக்குளத்தை சோ்ந்த பூமிநாதன் மனைவி தங்கவேலிடம் (62) கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, மா்ம நபா்கள் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாயினை திருடிச் சென்றனா். இதுகுறித்து மூதாட்டி தங்கவேல் கொடுத்த புகாரின் பேரில், கமுதி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com