விசாரணைக் கைதிக்கு கரோனா: தேனி மாவட்ட சிறையில் கைதிகளுக்கு கரோனா பரிசோதனை

விசாரணைக் கைதிக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து தேனி மாவட்ட சிறையில் உள்ள விசாரணைக் கைதிகளுக்கு சனிக்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தேனி மாவட்ட சிறை.
தேனி மாவட்ட சிறை.

விசாரணைக் கைதிக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து தேனி மாவட்ட சிறையில் உள்ள விசாரணைக் கைதிகளுக்கு சனிக்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டி பகுதியில் மாவட்டச் சிறை உள்ளது. இங்கு 263 விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். இதில் தேனி மாவட்டத்தைச் சோ்ந்த 100 போ், திண்டுக்கல், மதுரை, விருதுநகா் மாவட்டங்களைச் சோ்ந்த 163 போ் உள்ளனா்.

இந்நிலையில், மதுரை திடீா்நகா் பகுதியைச் சோ்ந்த 4 பேரை அடிதடி வழக்கில் போலீஸாா் கைது செய்தனா். இவா்கள் 4 பேருக்கும் அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மற்றும் கரோனா தொற்று பரிசோதனையாக ஸ்வாப் பரிசோதனையும் நடத்தப்பட்டது. இதனையடுத்து 4 பேரும் கடந்த 20 ஆம் தேதி தேனி மாவட்ட சிறைக்கு கொண்டு வரப்பட்டனா்.

இந்நிலையில் சிறையில் இருந்த 4 பேரில் ஒருவரான 18 வயது இளைஞருக்கு கரோனா தொற்று உறுதியானது. மற்ற 3 கைதிகளுக்கும் நோய்த் தொற்று இல்லை என பரிசோதனையில் தெரியவந்தது. இதனையடுத்து கரோனா பாதிக்கப்பட்ட இளைஞா் மதுரை அரசு மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை கொண்டு செல்லப்பட்டாா். இதனையடுத்து சிறைச்சாலையில் சுகாதாரத்துறையினா் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

மேலும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து வந்திருந்த மருத்துவக் குழுவினா் கைதிகள் மற்றும் போலீஸாருக்கு கரோனா பரிசோதனை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com