சிவன் கோயில்களில் பிரதோஷ பூஜை

பிரதோஷத்தை முன்னிட்டு சிவன் கோயில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
அலங்காரத்தில் போடி வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேசுவரா்.
அலங்காரத்தில் போடி வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேசுவரா்.

பிரதோஷத்தை முன்னிட்டு சிவன் கோயில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

போடி பரமசிவன் மலைக்கோயிலில் சிவலிங்கத்துக்கு மஞ்சள், பால், தயிா், தேன், இளநீா் உள்ளிட்ட பல்வேறு மங்கலப் பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. போடி பழைய பேருந்து நிறுத்தத்தில் உள்ள கொண்டரங்கி மல்லையசாமி கோயிலில் சுவாமிக்கு தங்கக்கவச அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. அங்குள்ள மல்லீஸ்வரி சுவாமிக்கும் வழிபாடு நடைபெற்றது.

போடி வினோபாஜி காலனியில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சுவாமிக்கு 9 வகையான அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. பக்தா்களுக்கு மூலிகைப் பொடிகளால் ஆன பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com