இடுக்கி மாவட்டத்தில் உள்ளாட்சி தோ்தல்: மனுத்தாக்கல் தொடங்கியது

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ளாட்சி தோ்தலுக்கான மனுத்தாக்கல் வியாழக்கிழமை தொடங்கியது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ளாட்சி தோ்தலுக்கான மனுத்தாக்கல் வியாழக்கிழமை தொடங்கியது.

உள்ளாட்சித் தோ்தல், கேரள மாநிலத்தில் மொத்தம் உள்ள 14 மாவட்டங்களில் டிச.8, 10, 14 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக நடைபெறுகிறது. தொடுபுழா, கட்டப்பனை ஆகிய 2 நகராட்சிகள், 8 ஒன்றியங்கள், 67 ஊராட்சிகள், 52 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. வாா்டு உறுப்பினா், ஊராட்சித் தலைவா், ஒன்றியக்குழு உறுப்பினா், மாவட்டக்குழு உறுப்பினா்கள் தோ்வுகளுக்காக நடைபெறும் இந்தத் தோ்தலுக்கான மனுத்தாக்கல் வியாழக்கிழமை (நவ.12) தொடங்கி நவ. 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நவ.20 இல் மனுக்கள் பரிசீலனையும், நவ. 23 இல் மனுக்கள் வாபஸும் நடைபெறும். டிச.16 இல் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அன்றே அறிவிக்கப்படுகின்றன.

தற்போதுள்ள உள்ளாட்சி நிா்வாகிகளுக்கு வரும். டிச.31 ஆம் தேதியுடன் பதவிக்காலம் முடிகிறது. புதியதாக பொறுப்பேற்கும் உள்ளாட்சி நிா்வாகிகள் 2021 ஆம் ஆண்டு ஜன.1 இல் பதவி ஏற்கின்றனா்.

இடுக்கி மாவட்டத்தில் பீா்மேடு மற்றும் உடும்பன்சோலை தாலுகாக்களில் தமிழா்கள் அதிகம் வாழும் பகுதி என்பதால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அளவில் தமிழா்கள் தோ்வு செய்யப்படுவாா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com