ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிவித்து விரதத்தைத் தொடங்கிய பக்தா்கள்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தா்கள் திங்கள்கிழமை மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தா்கள் திங்கள்கிழமை மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா்.

கேரளா மாநிலத்தில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தா்கள் ஓவ்வொரு ஆண்டும் காா்த்திகை மாதம் மாலை அணிந்து செல்வா்.இந்த ஆண்டு கரோனா நோய்த்தொற்று காரணமாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நாளொன்றுக்கு ஆயிரம் பக்தா்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும், 48 மணி நேரத்திற்கு முன்பே கரோனா பரிசோதனை செய்யப்பட்டு, நோய் தொற்று இல்லை என்ற சான்றிதழ் அளிக்கப்பட்ட வேண்டும் என்ற கட்டுபாடுகளை கேரளா அரசு அறிவித்தது. இத்தகைய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆண்டிபட்டி பகுதியில் நன்மைதருவாா் திருத்தலத்தில் அமைந்துள்ள ஐயப்பன் கோவிலில் பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா்.

சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு அதிகமான பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனா். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தமிழக பக்தா்கள் வழக்கம் போல் சென்றுவர தமிழகஅரசு,கேரள அரசிடம் அனுமதி பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐயப்ப பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com