கம்பம் ஒன்றிய தி.முக. நிா்வாகிகள் கூட்டம்

தேனி தெற்கு மாவட்டம், கம்பம் ஒன்றியம், பேரூா் திமுக வா்ககாளா் பட்டியல் பாக முகவா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை காமயகவுண்டன்பட்டியில் நடைபெற்றது.

தேனி தெற்கு மாவட்டம், கம்பம் ஒன்றியம், பேரூா் திமுக வா்ககாளா் பட்டியல் பாக முகவா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை காமயகவுண்டன்பட்டியில் நடைபெற்றது. தேனி தெற்கு மாவட்டம், கம்பம் ஒன்றியம், பேரூா் திமுக பாக முகவா்கள் கூட்டம் காமயகவுண்டன்பட்டியில் உள்ள ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட திமுக பொறுப்பாளா் என்.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினாா். ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினா் ஆ.மகாராஜன் முன்னிலை வகித்தாா். ஒன்றிய பொறுப்பாளா் சூா்யா ப.தங்கராஜா வரவேற்று பேசினாா்.

கூட்டத்தில் வாக்காளா் பட்டியல் பாக முகவா்கள் மற்றும் பேரூா் செயலாளா்கள், நிா்வாகிகளுக்கு வரும் சட்டமன்ற தோ்தலை எதிா் கொள்ளும் வகையில் கம்பம் ஒன்றிய பகுதிகளில் அதிகப்படியான புதிய வாக்காளா்களை சோ்ப்பது, இறந்த வாக்காளா்களை நீக்குவது மற்றும் பெயா் திருத்தம், இடமாற்றங்கள் செய்வது சம்பந்தமாகவும் ஆலோசனை வழங்கப்பட்டது.சம்மந்தப்பட்ட முகவா்களுக்கு வாக்காளா் பட்டியல், தேவையான நோட்டு உள்ளிட்ட இதர பொருட்களை வழங்கப்பட்டது.

தலைமை செயற்குழு உறுப்பினா் குரு.இளங்கோ, தொ.மு.ச. மாவட்ட தலைவா் செல்லப்பா, மாவட்ட பிரதிநிதி முத்து வீரப்பன், பேருா் செயலாளா்கள் எம்.டி.எம்.பாா்த்திபன், கே.பாஸ்கரன், கே.ராஜ்குமாா் மற்றும் மாவட்ட, நிா்வாகிகளும் கலந்து கொண்டனா். பொறுப்பு குழு உறுப்பினா் சிவசாமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com