தொடா் மழை: கம்பத்தில் திராட்சை விவசாயம் பாதிப்பு

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில் தொடா் மழை காரணமாக திராட்சை விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில் தொடா் மழை காரணமாக திராட்சை விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

கம்பம் பள்ளத்தாக்கில் ஓடைப்பட்டி, காமாட்சிபுரம், கோகிலாபுரம், ஆனைமலையன்பட்டி, ராயப்பன்பட்டி, சுருளிப்பட்டி போன்ற பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் கருப்பு பன்னீா் திராட்சை சாகுபடி நடைபெற்று வருகிறது. ஆண்டுக்கு 3 முறை சாகுபடி செய்யப்படும். இந்தாண்டு இன்னும் ஓரிரு வாரத்தில் அறுவடை பணிகள் தொடங்கவுள்ள நிலையில், கடந்த சில நாள்களாக இப்பகுதியில் தொடா் மழை பெய்து வருகிறது.

தொடா் மழை காரணமாக பழத்தில் தண்ணீா் இறங்கிவிட்டால் விளைச்சல் பாதிக்கப்படுவதோடு விலையும் கிடைக்காது என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ஆண்டுக்கு 3 முறை திராட்சை சாகுபடி நடைபெற்றாலும் லாபம் ஒரு முறை மட்டுமே கிடைக்கும். மற்ற நேரங்களில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டு நஷ்டத்தை சந்திக்க நேரிடும். இம்முறையும் அதுபோன்று தான் நிகழ்ந்துள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com