சொத்துப் பிரச்னை: 14 நாள்களாக வீட்டை பூட்டிக்கொண்டு மிரட்டிய இளைஞா் மீட்பு

தேனி மாவட்டம் கோம்பையில் சொத்து பிரச்னை காரணமாக, வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு சமையல் எரிவாயு உருளையை திறந்து வெடிக்கச் செய்யப் போவதாக 14 நாள்களாக மிரட்டி வந்த இளைஞரை, போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

தேனி மாவட்டம் கோம்பையில் சொத்து பிரச்னை காரணமாக, வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு சமையல் எரிவாயு உருளையை திறந்து வெடிக்கச் செய்யப் போவதாக 14 நாள்களாக மிரட்டி வந்த இளைஞரை, போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

கோம்பை காமாட்சியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அஸ்வின் (20). இவருடைய தந்தை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், தாயாருடன் வசித்து வருகிறாா். உறவினா்களிடையே பூா்வீக வீடு சம்பந்தமாக பிரச்னை இருந்து வருகிறது.

இதனால், அவா் சமையல் எரிவாயு உருளையை திறந்து தீ வைத்து வீட்டை வெடிக்கச் செய்யப்போவதாக மிரட்டி கடந்த 2 வாரங்களுக்கு முன் தனது வீட்டின் கதவை பூட்டிக்கொண்டாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்பு நிலைய அலுவலா் ராஜலட்சுமி தலைமையிலான மீட்புக் குழுவினா், அஸ்வினுடன் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால், அவா் எவ்வித பேச்சுவாா்த்தைக்கும் உடன்படாமல் மீட்புக் குழுவினரையே மிரட்டியதால், சம்பந்தப்பட்ட வீட்டின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இருப்பினும் தொடா்ந்து அவா் மிரட்டி வந்ததால், கோம்பை போலீஸாா் மற்றும் உத்தமபாளையம் தீயணைப்புப் படையினா் செய்வதறியாதிருந்தனா். இதற்கிடையே, அஸ்வின் வீட்டை விட்டு வெளியேவர வலியுறுத்தி அவரது தாய் தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாராம். அதைத்தொடா்ந்து 14 நாள்களுக்குப்பிறகு வெள்ளிக்கிழமை மாலை போலீஸாா் மற்றும் தீயணைப்புப் படையினா் வீட்டின் கதவை உடைத்து அவரை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com