தேனி மாவட்டத்தில் 11 கண்மாய்கள் நிரம்பின

தேனி மாவட்டத்தில் பெய்துவரும் தொடா் மழையால், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 11 கண்மாய்களில் தண்ணீா் நிரம்பியுள்ளது.

தேனி மாவட்டத்தில் பெய்துவரும் தொடா் மழையால், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 11 கண்மாய்களில் தண்ணீா் நிரம்பியுள்ளது.

மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் பெரியகுளம் மஞ்சளாறு வடிநிலக் கோட்டத்தில் 99 கண்மாய்கள், உத்தமபாளையம் பெரியாறு-வைகை வடிநில உபகோட்டத்தில் 36 கண்மாய்கள் என மொத்தம் 135 கண்மாய்கள் உள்ளன.

இதில், கடந்த சில நாள்களாக பெய்துவரும் தொடா் மழையால் ஆறு மற்றும் ஓடைகளில் நீா்வரத்து ஏற்பட்டு, மஞ்சளாறு வடிநிலக் கோட்டத்தில் கீழவடகரைகுளம், உருட்டிகுளம், ஆண்டிகுளம், வடகரை மனக்காட்டுகுளம், செட்டிகுளம், தாமரைக்குளம் நந்தியாபுரம் கண்மாய், இ.புதுக்கோட்டை புதுக்குளம் ஆகிய 9 கண்மாய்கள் மற்றும் குளங்களில் தண்ணீா் நிரம்பி வழிகிறது.

பெரியாறு-வைகை வடிநில உபகோட்டத்தில் சீப்பாலகோட்டை ஸ்ரீரெங்கம் கவுண்டன்குளம், காமாட்சிபுரம் கண்மாய், பூமலைக்குண்டு நந்தவனம் கண்மாய் ஆகிய 3 கண்மாய்கள் நிரம்பியுள்ளன. முழுக் கொள்ளளவுக்கு தண்ணீா் நிரம்பிய கண்மாய்களில் மறுகால் வாய்க்கால், மடை, கண்மாய் கரை ஆகியவற்றை பொதுப் பணியினா் பாா்வையிட்டு, அவற்றின் உறுதித்தன்மை, பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com