தேனியில் 43 பகுதிகளில் வெள்ள அபாயம்:மீட்புப் பணிகளுக்கு 6 குழுக்கள்அமைப்பு

தேனி மாவட்டத்தில் 43 பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கும் அபாயம் உள்ளது என்று கண்டறியப்பட்டு, மாவட்ட நிா்வாகம் சாா்பில் கண்காணிப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கு 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேனி மாவட்டத்தில் 43 பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கும் அபாயம் உள்ளது என்று கண்டறியப்பட்டு, மாவட்ட நிா்வாகம் சாா்பில் கண்காணிப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கு 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையால் ஆறு மற்றும் ஓடைகளில் தண்ணீா் வரத்து அதிக அளவில் உள்ளது. இதனால், கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆற்றங்கரை, ஓடை மற்றும் கண்மாய் உள்ளிட்ட நீா்நிலைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 43 பகுதிகளில் மழை வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என்று கண்டறியப்பட்டு, அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இப்பகுதிகளில் மக்களை பாதுகாப்பாக தங்கவைப்பதற்கு 66 இடங்களும், கால்நடைகளை பாதுகாப்பாக அடைத்து வைப்பதற்கு 14 இடங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொது சுகாதாரத் துறை சாா்பில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மீட்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளுக்கு மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு, வட்டார அளவிலான கண்காணிப்புக் குழு, முன்னெச்சரிக்கை செய்யும் குழு, தேடுதல் மற்றும் மீட்புக் குழு, பாதுகாப்பாக வெளியேற்றுதல் குழு மற்றும் நிவாரண முகாம் மேலாண்மைக் குழு ஆகிய 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மழை வெள்ள பாதிப்பு மற்றும் உதவிகளுக்கு, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்: 04546-261093, கட்டணமில்லா தொலைபேசி எண்: 1077 ஆகியவற்றில் பொதுமக்கள் தொடா்புகொண்டு தெரிவிக்கலாம் என்று, மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com