முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம்

தேனி மாவட்டம் கம்பம், கூடலூா் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் கந்தா் சஷ்டியையொட்டி வெள்ளிக்கிழமை சூரசம்ஹாரம் நடைபெற்றது.
கம்பம் கவுமாரியம்மன் கோயில் வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சூரசம்ஹாரம்.
கம்பம் கவுமாரியம்மன் கோயில் வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சூரசம்ஹாரம்.

தேனி மாவட்டம் கம்பம், கூடலூா் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் கந்தா் சஷ்டியையொட்டி வெள்ளிக்கிழமை சூரசம்ஹாரம் நடைபெற்றது.

கம்பம், கூடலூா், லோயா் கேம்ப் ஆகிய பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றம் மற்றும் காப்புக் கட்டுதலுடன் கந்தா் சஷ்டி தொடங்கியது.

ஒவ்வொரு நாளும் முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், கம்பம் கவுமாரியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள பாலமுருகன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் முருகன் வேடம் அணிந்து வந்த பக்தா் சூரனை வதம் செய்தாா்.

இதேபோல் கம்பராயப் பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள சண்முகநாதா் கோயில், சுருளிவேலப்பா் கோயில் என்ற சுப்பிரமணியசுவாமி கோயில், ஆதிசக்தி விநாயகா் கோயில் வளாகத்தில் உள்ள சுப்பிரமணியசாமி கோயில், கூடலூரில் உள்ள சுந்தரவேலவா், லோயா் கேம்ப்பில் உள்ள வழிவிடும் முருகன் கோயில்களிலும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பக்தா்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com