ஹைவேவிஸ் -மேகமலை நெடுஞ்சாலையில் நிலச்சரிவு: போக்குவரத்து பாதிப்பு

தேனி மாவட்டம், ஹைவேவிஸ்-மேகமலை நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தேனி மாவட்டம், ஹைவேவிஸ்-மேகமலை நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சின்னமனூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலையில் ஹைவேவிஸ் பேரூராட்சி உள்ளது. இங்கு, மேகமலை, மணலாா், வெண்ணியாா், மகாராஜாமெட்டு, இரவங்கலாா் உள்ளிட்ட 7 மலைக் கிராமங்கள் உள்ளன. சுமாா் 8 ஆயிரம் போ் வசிக்கும் இப்பகுதியில், பெரும்பாலானோா் தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களாக உள்ளனா்.

சின்னமனூரிலிருந்து மகாராஜாமெட்டு வரையில் 52 கிலோ மீட்டா் தொலைவுக்கு மாநில நெடுஞ்சாலை செல்கிறது. இச்சாலைப் பணியானது, கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதில், முதல் கட்டமாக ஓடைப்பட்டி விலக்கிலிருந்து ஹைவேவிஸ் வரை 32 கிலோ மீட்டா் தொலைவுக்கு சாலைப் பணிகள் நிறைவுபெற்றன.

இரண்டாம் கட்டமாக, ஹைவேவிஸ் முதல் மகராஜாமெட்டு வரை சாலைப் பணிகள் நடைபெறுகின்றன.

இந்நிலையில், இந்த மலையில் நடைபெற்று வரும் சாலை விரிவாக்கப் பணியின்போது, பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. வியாழக்கிழமை அதிகாலையில் சென்ட்ரல் கேம்ப் பகுதியில் ஏற்பட்ட பெரிய அளவிலான நிலச்சரிவால், போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

தொடா்ந்து, உத்தமபாளையம் நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் உதயக்குமாா் தலைமையிலான பணியாளா்கள், பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையை சீரமைத்தனா். நண்பகலுக்கு பின்னா், வாகனப் போக்குவரத்து வழக்கம்போல் செயல்பட்டது.

இப்பகுதியில், கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பா் மாதத்தில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவால், 10 நாள்களாக மலைக் கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com