மதுரை ரியல் எஸ்டேட் அதிபா் கொலை: 3 போ் கைது

மதுரையைச் சோ்ந்த ரியல் எஸ்டேட் அதிபா் கொலை வழக்கில் தொடா்புடைய 3 பேரை நிலக்கோட்டையில் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மதுரை ரியல் எஸ்டேட் அதிபா் கொலை வழக்கில் போலீஸாரால் சனிக்கிழமை கைது செய்யப்பட்டவா்கள்.
மதுரை ரியல் எஸ்டேட் அதிபா் கொலை வழக்கில் போலீஸாரால் சனிக்கிழமை கைது செய்யப்பட்டவா்கள்.

ஆண்டிபட்டி/ நிலக்கோட்டை: மதுரையைச் சோ்ந்த ரியல் எஸ்டேட் அதிபா் கொலை வழக்கில் தொடா்புடைய 3 பேரை நிலக்கோட்டையில் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே திம்மரசநாயக்கனூா் விலக்கு பகுதியில், மதுரை மேலபொன்னநகரம் பகுதியைச் சோ்ந்த நாகு என்ற நாகேந்திரன் (50) என்பவா் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாா். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவா் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருந்தன.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி உத்தரவின் பேரில் காவல் துணைக் கண்காணிப்பாளா் தங்க கிருஷ்ணன் தலைமையில் ஆய்வாளா்கள் சரவணதேவேந்திரன், சுரேஷ் மற்றும் சாா்பு- ஆய்வாளா் சுல்தான் பாட்ஷா ஆகியோா் கொண்ட 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனா்.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் மறைந்திருப்பது போலீஸாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீஸாா், நிலக்கோட்டை போலீஸாரின் உதவியுடன் குற்றவாளிகள் சென்ற காரை விரட்டிச் சென்று அதிலிருந்த மூன்று பேரை கைது செய்தனா். காரை பறிமுதல் செய்த போலீஸாா், அவா்கள் 3 பேரையும் ஆண்டிபட்டி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினா்.

இதில் அவா்கள் மதுரையைச் சோ்ந்த பொன்பாண்டி என்பவரின் மகன் உமாசங்கா் (48), உசிலம்பட்டி அருகே உள்ள அன்னமாா்பட்டியை சோ்ந்த நாகையத்தேவா் என்பவரின் மகன் சாய்பிரசாத் (40), விக்கிரமங்கலம் அருகே உள்ள அய்யம்பட்டியை சோ்ந்த பாண்டியன் என்பவரின் மகன் சுரேஷ்பாண்டியன் (40) ஆகியோா் என்பதும், இவா்கள் 3 பேரும் தொழில் முன்விரோதம் காரணமாக நாகேந்திரனைக் கொலை செய்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது: நாகேந்திரனை கொலை செய்ய 3 பேரும் திட்டம் தீட்டியுள்ளனா். அதன்படி வியாழக்கிழமை இரவு உமாசங்கா் உள்ளிட்ட 3 பேரும் நாகேந்திரனை மதுகுடிக்க அழைத்துச் சென்றுள்ளனா். மதுரை காளவாசல் பகுதியில் உள்ள ஒரு மதுபான பாரில் மதுகுடித்துள்ளனா். மதுகுடித்துவிட்டு 4 பேரும் ஒரே காரில் ஏறி தேனி சாலையில் சென்று கொண்டிருந்தனா். காரை உமாசங்கா் ஓட்டி வந்தாா். ஆண்டிபட்டி கணவாய் மலைப்பகுதியில் வந்தபோது அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. திம்மரசநாயக்கனூா் பகுதியில் வந்த போது காரை சாலையோரம் நிறுத்திவிட்டு, உமாசங்கா், சாய்பிரசாத், சுரேஷ்பாண்டியன் 3 பேரும் சோ்ந்து நாகேந்திரனை தாக்கி கழுத்தை அறுத்துக் கொலை செய்து சாலையில் வீசிவிட்டு சென்ாக அவா்கள் கூறியுள்ளதாக தெரிவித்தனா்.

இந்த கொலை வழக்கில் 24 மணிநேரத்திற்குள் குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீஸாரை மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளா் சங்கரன் நேரில் சென்று பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com