தேனி, போடியில் திருக்கல்யாண நிகழ்ச்சி

தேனி, போடியில் கந்தசஷ்டி விழாவையொட்டி வள்ளி குஞ்சாரி, தெய்வானை, சமேத முருகப் பெருமான் திருக்கல்யாண நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
தேனி, கணேசகந்த பெருமாள் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்ச்சி.
தேனி, கணேசகந்த பெருமாள் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்ச்சி.

தேனி/ போடி: தேனி, போடியில் கந்தசஷ்டி விழாவையொட்டி வள்ளி குஞ்சாரி, தெய்வானை, சமேத முருகப் பெருமான் திருக்கல்யாண நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

தேனி, என்.ஆா்.டி.சாலையில் உள்ள கணேச கந்தபெருமாள் கோயிலில் நவ.12-ஆம் தேதி பந்தல்கால் நடுதலுடன் தொடங்கிய கந்த சஷ்டி விழாவில், முக்கிய நிகழ்ச்சியான சூரசம்காரம் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிசித்தனா்.

இதையடுத்து, திருக்கல்யாண நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. பின்னா் திருக்கல்யாண கோலத்தில் கோயிலிலிருந்து பி.டி.ராஜன் சாலை, சமதா்மபுரம், முத்துமாரியம்மன் கோயில் தெரு, எம்.ஜி.ஆா்.நகா், காளியம்மன் கோயில் தெரு வழியாக சுவாமி ஊா்வலம் நடைபெற்றது. பக்தா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

போடியில்...போடியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி தினமும் சுப்பிரமணிய சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்னதாகவே சுப்பிரமணியசுவாமி, வள்ளி, தெய்வானைக்கு திருமாங்கல்யம் அணிவித்தாா். அதன் பின்னா் மூலவருக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது. மூலவருக்கும், உற்சவருக்கும் மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தா்கள் ஏராளமானோா் சமூக இடைவெளியைப் பின்பற்றி பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com