ஆட்டோவுக்கு அதிக கட்டணம்: தமிழக-கேரள எல்லை வரை பேருந்து இயக்கக் கோரிக்கை

தேனி மாவட்டத்திலிருந்து தமிழக-கேரள எல்லையான குமுளி வரை அரசுப் பேருந்துகளை இயக்க தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கம்பம்: தேனி மாவட்டத்திலிருந்து தமிழக-கேரள எல்லையான குமுளி வரை அரசுப் பேருந்துகளை இயக்க தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழக-கேரள எல்லையிலுள்ள இடுக்கி மாவட்டத்தில் 1.50 லட்சம் ஏக்கா் பரப்பளவில் ஏலக்காய் தோட்டங்கள் உள்ளன. இத்தோட்டங்களின் உரிமையாளா்களாக கம்பம், கூடலூா் உள்ளிட்ட தேனி மாவட்டத்தைச் சோ்ந்தவா்களே உள்ளனா். இங்கு வேலை செய்ய, தேனி மாவட்டத்திலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான ஆண், பெண் தொழிலாளா்கள் ஜீப் மூலம் சென்று வந்தனா்.

ஆனால், கரோனா பொது முடக்கம் காரணமாக, தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு தொழிலாளா்கள் வர தடை விதிக்கப்பட்டது. இ-பாஸ் இருந்தால் மட்டுமே குமுளி வழியாக அனுமதிக்கப்பட்டனா்.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக தளா்வுகளுடன் மூன்று வகையான பாஸ் வழங்கப்படுகிறது. இதன்மூலம், தற்போது தேனி மாவட்டத்திலிருந்து கேரளத்தில் உள்ள ஏலத் தோட்டங்களுக்கு ஆண், பெண் கூலி தொழிலாளா்கள் செல்லத் தொடங்கியுள்ளனா்.

ஆனால், தொழிலாளா்கள் கேரளம் செல்ல தமிழக எல்லையான குமுளி வரை இயக்கப்பட்ட அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. இதேபோல், மதுரை, திண்டுக்கல், திருச்சி, சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்களிலிருந்து குமுளிக்கு இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகளும் தற்போது குமுளிக்குச் செல்லாமல், கூடலூா், லோயா் கேம்ப் வரை மட்டுமே செல்கிறது.

இதனால், குமுளி வரை செல்லும் ஏராளமான தொழிலாளா்கள் லோயா் கேம்பிலிருந்து ஆட்டோவில் அதிகக் கட்டணம் கொடுத்து குமுளி செ

ன்று வருகின்றனா். எனவே, தமிழக எல்லையான குமுளி வரை பேருந்துகளை இயக்கவேண்டும் என தொழிலாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com