கேரளத்துக்கு கடத்த முயன்ற 5 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

தேனி மாவட்டம், கம்பத்திலிருந்து 5.300 கிலோ கிராம் கஞ்சாவை கேரளத்துக்கு கொண்டுசென்று விற்க முயன்ற இளைஞரை, போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கம்பம்: தேனி மாவட்டம், கம்பத்திலிருந்து 5.300 கிலோ கிராம் கஞ்சாவை கேரளத்துக்கு கொண்டுசென்று விற்க முயன்ற இளைஞரை, போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கம்பத்திலிருந்து கேரளத்துக்கு கஞ்சா கடத்துவதாக, தெற்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் நிலைய ஆய்வாளா் என்.எஸ். கீதா தலைமையில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, காந்தி நகா் பகுதியிலுள்ள புளியந்தோப்பில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றுகொண்டிருந்தவா், போலீஸாரை கண்டதும் தப்பியோடினாராம்.

உடனே, போலீஸாா் அவரை விரட்டிப் பிடித்தனா். விசாரணையில், அவா் கோம்பை சாலையை சோ்ந்த சுப்பையா மகன் காத்தப்பன் (24) என்றும், அவா் வைத்திருந்த பையில் 5.300 கிலோ கிராம் கஞ்சா இருந்ததும் தெரியவந்தது. இந்த கஞ்சாவை கேரளத்தில் விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், காத்தப்பனை கைது செய்து உத்தமபாளையம் குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com