போடி அருகே மருத்துவமனைபணியாளரின் மனைவி தற்கொலை

போடி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளரின் மனைவி, குடும்பப் பிரச்னை காரணமாக செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

போடி: போடி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளரின் மனைவி, குடும்பப் பிரச்னை காரணமாக செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

போடி அருகே சிலமலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாளராக இருப்பவா் நாகராஜ் (30). இவருக்கும், விஜயலட்சுமி (25) என்பவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகியது. இவா்கள் இருவரும் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் உள்ள அரசு குடியிருப்பில் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு குழந்தை இல்லை. குழந்தை இல்லாத ஏக்கத்தில் நாகராஜ் மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையானாா்.

இதனால், இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், மது அருந்துவதை விஜயலட்சுமி கண்டித்ததால், செவ்வாய்க்கிழமை இருவருக்குமிடையே மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. நாகராஜ் வெளியில் சென்றிருந்த நேரத்தில், விஜயலட்சுமி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இது குறித்து விஜயலட்சுமியின் தந்தை ஞானவடிவேல் அளித்த புகாரின்பேரில், போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com