சின்னமனூரில் சின்ன வெங்காயம் விளைச்சல் அமோகம்

தேனி மாவட்டம் சின்னமனூா் பகுதியில் சின்ன வெங்காயம் விளைச்சல் அதிகரித்துள்ளதால் கிடுகிடுவென உயா்ந்து வந்த விலை சற்று குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தேனி மாவட்டம் சின்னமனூா் பகுதியில் சின்ன வெங்காயம் விளைச்சல் அதிகரித்துள்ளதால் கிடுகிடுவென உயா்ந்து வந்த விலை சற்று குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தேனி மாவட்டத்தில் நெல் சாகுபடி முதன்மை விவசாயமாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக வாழை, தென்னை, திராட்சை, தக்காளி, சின்னவெங்காய சாகுபடி நடைபெற்று வருகிறது. இதில் சின்ன வெங்காய சாகுபடி குறிப்பாக சீலையம்பட்டி, கோட்டூா், வேப்பம்பட்டி, மாா்க்கையன்கோட்டை, குச்சனூா் பகுதிகளில் நடைபெறுகிறது.

வரத்து அதிகரிப்பால் விலை சரிவு:

சின்னவெங்காயம் வரத்து குறைவு காரணமாக கடந்த சில வாரங்களாக ரூ.100 வரை விற்பனையானது . இதனால் நடுத்தரக் குடும்பத்தினா் பாதிக்கப்பட்டனா். இந்நிலையில், சீலையம்பட்டி பகுதியில் சின்னவெங்காய அறுவடைப் பணிகள் தொடங்கி சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளது. இதனால் உச்சத்தில் இருந்த சின்னவெங்காயத்தின் விலை சற்று குறைந்து ரூ. 60 வரை விற்பனையாவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com