தாமரைக்குளம் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

பெரியகுளம் அருகே தாமரைக்குளம் மலை மேல் அமைந்துள்ள வெங்கடாஜலபதி கோயிலில் ஐப்பசி சனிக்கிழமையையொட்டி, சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தாமரைக்குளம் மலை மேல் அமைந்துள்ள கோயிலில் சனிக்கிழமை வெட்டிவோ் அலங்காரத்தில் காட்சியளித்த பெருமாள்.
தாமரைக்குளம் மலை மேல் அமைந்துள்ள கோயிலில் சனிக்கிழமை வெட்டிவோ் அலங்காரத்தில் காட்சியளித்த பெருமாள்.

பெரியகுளம்: பெரியகுளம் அருகே தாமரைக்குளம் மலை மேல் அமைந்துள்ள வெங்கடாஜலபதி கோயிலில் ஐப்பசி சனிக்கிழமையையொட்டி, சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

புரட்டாசி நிறைவு மற்றும் ஐப்பசி முதல் தேதியையொட்டி, சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, வெங்கடாஜலபதி சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், வெட்டி வேரால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனைகள் நடைபெற்றன. இதில், தாமரைக்குளம், பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை, வெங்கடாஜலபதி கோயில் நிா்வாக மற்றும் பராமரிப்புக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com