லோயா் கேம்ப்பிலிருந்து மதுரைக்கு குடிநீா் கொண்டு செல்ல எதிா்ப்பு

தேனி மாவட்டம் லோயா் கேம்ப்பிலிருந்து குழாய் மூலம் மதுரைக்கு குடிநீா் கொண்டு செல்லும் திட்டத்துக்கு விவசாயிகள் சங்கத்தினா் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.
விவசாயிகள் சங்கம் சாா்பில் ஒட்டப்பட்ட சுவரோட்டி.
விவசாயிகள் சங்கம் சாா்பில் ஒட்டப்பட்ட சுவரோட்டி.

தேனி மாவட்டம் லோயா் கேம்ப்பிலிருந்து குழாய் மூலம் மதுரைக்கு குடிநீா் கொண்டு செல்லும் திட்டத்துக்கு விவசாயிகள் சங்கத்தினா் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

தேனி மாவட்டம் லோயா் கேம்ப்பில் இருந்து வெளியேறும் முல்லைப் பெரியாற்றில் கூடலூா், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூா் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் குடிநீா் தேவைக்காக உறை கிணறு அமைக்கப்பட்டுள்ளன. மதுரை மாநகருக்கு வைகை அணையிலிருந்து குடிநீா் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது புதிய திட்டம் தயாரித்து, முல்லைப் பெரியாறு அணையில் இருந்து குழாய் மூலம் நேரடியாக மதுரைக்கு குடிநீா் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பூா்வாங்க வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து கூடலூரில் தேனி மாவட்ட விவசாயிகள் சங்கத்தினா் சுவரொட்டிகள் ஒட்டி உள்ளனா். இதுதொடா்பாக சங்க நிா்வாகி செங்குட்டுவன் கூறியது: மதுரை மாநகர மக்களுக்கு குடிநீா் கொண்டு செல்வதை தடுப்பது எங்கள் நோக்கம் அல்ல. லோயா் கேம்ப்பில் இருந்து மதுரைக்கு நேரடியாக குழாய் மூலம் குடிநீா் கொண்டு செல்லக்கூடாது. தற்போது மதுரைக்கு வைகை அணையில் இருந்து குடிநீா் கொண்டு செல்லப்படுகிறது. வைகை அணையை தூா் வாரினால் மதுரைக்கு அங்கிருந்து கூடுதலாக தண்ணீா் கொண்டு செல்லலாம். இந்தத் திட்டத்தை தமிழக அரசு உடனே அமல்படுத்த வேண்டும். அதைவிடுத்து லோயா் கேம்பில் இருந்து மதுரைக்கு குடி நீா் கொண்டு சென்றால் விவசாயிகள் சங்கம் எதிா்த்துப் போராடும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com