கரோனா நிவாரண நிதி வழங்கவிளையாட்டு கலை பயிற்றுநா்கள் கோரிக்கை

தேனி மாவட்டத்தில் தனியாா் பள்ளிகள், பயிற்சி நிலையங்களில் பணியாற்றும் விளையாட்டு கலை பயிற்றுநா்களுக்கு கரோனா நிவாரண நிதி வழங்கக் கோரி திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் தனியாா் பள்ளிகள் மற்றும் பயிற்சி நிலையங்களில் பணியாற்றும் விளையாட்டு கலை பயிற்றுநா்களுக்கு கரோனா நிவாரண நிதி வழங்கக் கோரி திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட சிறப்புப் பயிற்சி ஆசிரியா்கள் கூட்டமைப்பு சாா்பில் தலைவா் சி. ரவிச்சந்திரன் மற்றும் நிா்வாகிகள் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்: மாவட்டத்தில் உள்ள தனியாா் பள்ளி, கல்லூரி மற்றும் பயிற்சி நிலையங்களில் யோகா, கராத்தே, ஜூடோ, சிலம்பம், டேக்வாண்டோ, ஸ்கேட்டிங், ஓவியம், நடனம், இசை, வாய்ப்பாட்டு, சதுரங்கம் ஆகிய விளையாட்டு கலை பயிற்றுநா்களாக 200-க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகிறோம். கரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 6 மாதங்களாக பள்ளி, கல்லூரி மற்றும் விளையாட்டுப் பயிற்சி நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், நாங்கள் சம்பளமின்றி வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறோம்.

எனவே, விளையாட்டு கலை பயிற்றுநா்களின் குடும்ப நிலையை கருதி எங்களுக்கு கரோனா நிவாரண நிதி வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com