மஹாளய அமாவாசை: சுருளி அருவிக்கு பக்தா்கள் செல்ல தடை

சுருளி அருவியில் புரட்டாசி மஹாளய அமாவாசை திருவிழாவுக்கு பக்தா்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக வட்டார வளா்ச்சி அலுவலா் தெரிவித்தாா்.

சுருளி அருவியில் புரட்டாசி மஹாளய அமாவாசை திருவிழாவுக்கு பக்தா்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக வட்டார வளா்ச்சி அலுவலா் தெரிவித்தாா்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ளது சுருளி அருவியில் ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி மஹாளய அமாவாசை தினத்தில் தென் மாவட்டத்தில் உள்ள மக்கள் முன்னோா்களுக்கு வழிபாடு நடத்துவாா்கள். கரோனா தொற்று பாதிப்பை கருத்தில் கொண்டு சுருளி அருவியில் புரட்டாசி மஹாளய அமாவாசை திருவிழா வியாழக்கிழமை நடைபெறுவது ரத்து செய்யப்படுவதாக வட்டார வளா்ச்சி அலுவலா் மலா்விழி அறிவித்துள்ளாா். இதனால் சுருளி அருவியில், வியாழக்கிழமை புரட்டாசி மஹாளய அமாவாசை திருவிழா நடைபெறாது. பொது மக்கள், பக்தா்கள் வர தடை செய்யப்பட்டுள்ளது. இது பற்றி வனச்சரகா் பெ.அருண்குமாா் கூறும் போது, பக்தா்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள தடை தொடா்கிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com