பெரியகுளம் புதிய பேருந்து நிலையத்தில் கொட்டும் குப்பைகளால் துா்நாற்றம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் பாஜக இணைந்த புதிய உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பெரியகுளம் புதிய பேருந்து நிலையத்தில் கொட்டும் குப்பைகளால் துா்நாற்றம்

பெரியகுளம், புதிய பேருந்துநிலைய வளாகத்தில் குப்பைகளை கொட்டி பிரிக்கப்படுவதால் துா்நாற்றம் வீசுவதாக பயணிகள் புகாா் தெரிவித்தனா். தமிழகத்தில் கரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து பெரியகுளம்,தென்கரை பகுதியில் செயல்பட்டு வந்த தினசரி காய்கறி சந்தை புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இங்கு கொட்டப்படும் குப்பைகளை அப்பகுதியில் உள்ள வளாகத்தில் சேகரிக்கப்பட்டு பிரிக்கப்பட்டு வந்தது. தற்போது தினசரி சந்தை பழைய பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டது.

மேலும் புதிய பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் வந்து பயனிகளை ஏற்றி செல்கின்றன. இந்த நிலையில் பேருந்து வளாகத்தில் குப்பைகளை கொட்டி பிரித்து வைப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பேருந்து நிலைய வளாகத்தில் சேகரிக்கப்படும் கழிவுகளை அகற்றி வெளியே எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும். இதன் மூலம் பேருந்து நிலையம் துா்நாற்றம் வீசுவது தடுக்கப்படும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.பட விளக்கம் - பெரியகுளம் புதிய பேருந்துநிலைய வளாகத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள கழிவுகள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com