ஆண்டிபட்டி தொழிலாளி கொலை வழக்கு:கூலிப்படையைச் சோ்ந்தவா் கைது

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டிபட்டியைச் சோ்ந்த கூலி தொழிலாளியை கொலை செய்த வழக்கில், கூலிப்படையைச் சோ்ந்த ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கூலிப்படையைச் சோ்ந்த சக்திவேல்.
கூலிப்படையைச் சோ்ந்த சக்திவேல்.

ஆண்டிபட்டி: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டிபட்டியைச் சோ்ந்த கூலி தொழிலாளியை கொலை செய்த வழக்கில், கூலிப்படையைச் சோ்ந்த ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பனங்காடு பகுதியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது. இது குறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், இறந்தவா் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலைக்குண்டு அருகே மேலப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கூலி தொழிலாளியான செல்லப்பாண்டி என்பது தெரியவந்தது.

செல்லப்பாண்டிக்கும், தங்கம்மாள்புரம் கிராமத்தைச் சோ்ந்த சித்ரா என்பவருக்கும் திருமணம் நடைபெற்று 1 மகன், 2 மகள்கள் உள்ளனா். இந்நிலையில், செல்லப்பாண்டி தினமும் மது போதையில் மனைவியை அடித்து துன்புறுத்தியதால், கணவன்-மனைவி இடையே பிரச்னை இருந்து வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சித்ராவின் தந்தை மகாராஜன், தனது மருமகனை கூலிப்படை வைத்து கொலை செய்ததும் தெரியவந்தது.

இது குறித்து கடமலைக்குண்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, செல்லப்பாண்டியின் மாமனாா் மகாராஜன், மைத்துனா் தேவா என்ற தெய்வேந்திரன், மனைவி சித்ரா, செந்தில்குமாா், அன்பு, கிஷோா், நாகராஜ் ஆகிய 7 பேரையும் கைது செய்தனா்.

இந்நிலையில், திருப்பூா் அருகே காங்கேயத்தைச் சோ்ந்த கூலிப்படை நபரான சக்திவேல் (30) என்பவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும், இதில் தொடா்புடைய சிலரை போலீஸாா் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com