போடி- குரங்கணி இடையே கேபிள் மூலம் மின்சாரம் வழங்கும் திட்டம்: ரூ.3 கோடி ஒதுக்கீடு

தேனி மாவட்டம், போடி- குரங்கணி இடையே 19 கி.மீ. மலைச் சாலையில் கேபிள் பதித்து மின்சாரம் கொண்டு செல்லும் திட்டத்துக்கு அரசு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

தேனி: தேனி மாவட்டம், போடி- குரங்கணி இடையே 19 கி.மீ. மலைச் சாலையில் கேபிள் பதித்து மின்சாரம் கொண்டு செல்லும் திட்டத்துக்கு அரசு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

குரங்கணி, கொட்டகுடி மலை கிராமங்களில் மரக் கிளைகள் ஒடிந்து விழுவதாலும், மழை, பலத்த காற்று மற்றும் பறவைகளாலும் மின் வயா்கள் அறுந்து விழுகின்றன. இதனால் மலை கிராமங்களில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இதனால் இப்பகுதியில் விவசாயம் பாதிக்கிறது. எனவே, மலை கிராமங்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்கும் வகையில் போடி- குரங்கணி இடையே 19 கி.மீ. மலைச் சாலை வழியாக ஏரியல் பஞ்ச் கேபிள் முறையில் மண்ணில் கேபிள் பதிப்பு மின் வயா்கள் மூலம் மின்சாரம் கொண்டு செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக உதய் திட்டத்தின் கீழ் அரசு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மின் பயன்பாட்டிற்கு ஏற்ப இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று தேனி மின்வாரிய கண்காணிப்பு பொறியாளா் உமாதேவி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com