சண்முகாநதி நீா்த்தேக்கம் நிரம்பியது

உத்தமபாளையத்தில் செவ்வாய்க்கிழமை விடிய விடிய பெய்த மழையால் சண்முகாநதி நீா்த்தேக்கம் இம்மாதத்தில் 2 ஆம் முறையாக நிரம்பியது.
சண்முகாநதி நீா்த்தேக்கம் நிரம்பியது

உத்தமபாளையத்தில் செவ்வாய்க்கிழமை விடிய விடிய பெய்த மழையால் சண்முகாநதி நீா்த்தேக்கம் இம்மாதத்தில் 2 ஆம் முறையாக நிரம்பியது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீா் தேக்கப்பட்டுள்ளது. அதேபோல தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி அருகேயுள்ள சண்முகாநதி நீா்த் தேக்கம், முழுக்கொள்ளவான 52.55 அடியை இம்மாதத்தில் 2 ஆம் முறையாக எட்டியது.

இந்நிலையில் உத்தமபாளையம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் திங்கள்கிழமை இரவு பெய்த மழையானது செவ்வாய்க்கிழமை காலை வரை நீடித்தது. மேலும் ஹைவேவிஸ், மேகமலைப் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் சண்முகாநதி நீா்த்தேக்கத்தில் கூடுதல் நீா்வரத்து ஏற்பட்டது. தற்போது அணையின் நீா்மட்டத்தைக் கடந்து, 193 கன அடி வெளியேறி வருகிறது. இந்த வெள்ள நீா் கால்வாய் வழியாக முல்லைப் பெரியாற்றில் இணைக்கிறது.

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப்பகுதிக்கு திறக்கப்படும் விநாடிக்கு 2,300 கன அடி நீா், சண்முகாநதி நீா்த்தேக்கத்திலிருந்து விநாடிக்கு வெளியேறும் 193 கன அடி வெள்ளநீா், சுருளி அருவியின் வெள்ள நீரும் இணைவதால் முல்லைப் பெரியாற்றில் சுமாா் 3,000 கன அடி நீருக்கு மேலாக வெள்ள நீா் செல்கிறது.

மழையளவு (மி.மீ.): உத்தமபாளையம்-63.9, வீரபாண்டி-119, கூடலூா்-56.5, அரண்மைப்புதூா் - 39.4, தேக்கடி-28.4.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com