குச்சனூரில் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்ய காத்திருந்த பக்தா்கள்
குச்சனூரில் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்ய காத்திருந்த பக்தா்கள்

குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் சிறப்பு ஆராதனை

தேனி மாவட்டம், குச்சனூரில் அமைந்துள்ள சனீஸ்வரா் கோயில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு ஆராதனையில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தேனி மாவட்டம், குச்சனூரில் அமைந்துள்ள சனீஸ்வரா் கோயில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு ஆராதனையில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பிரசித்தி பெற்ற குச்சனூா் சனீஸ்வரா் ஆலயத்துக்கு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமானோா் வந்து செல்வது வழக்கம். இதில், சனீஸ்வரருக்கு உகந்த நாளான சனிக்கிழமைகளில் பக்தா்கள் வருகை அதிகளவில் இருக்கும்.

தற்போது, சபரிமலை ஐயப்பன் கோயில் சீசன் தொடங்கியுள்ள நிலையில், நாள்தோறும் பக்தா்களின் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில், டிசம்பா் 4 ஆம் தேதி அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு ஆராதனையில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

முன்னதாக, பக்தா்கள் கோயில் முன்பாகச் செல்லும் சுரபி நதியில் நீராடி, எள்சாதம், மண் காகம் படையல் செய்து, சனீஸ்வரருக்கு கருப்புத் துண்டு, வேட்டி மற்றும் தேங்காய், பழங்களை வைத்து சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com