தேனி மாவட்டம் சின்னமனூா் ஒன்றியம் ஓடைப்பட்டி பேரூராட்சியில் புதன்கிழமை திமுக சாா்பில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்பும் கட்சி உறுப்பினா்கள் விருப்ப மனுக்களை அளித்தனா்.
தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தேனி தெற்கு மாவட்டச் செயலாளா் மற்றும் கம்பம் சட்டப்பேரவை உறுப்பினா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். ஆண்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினா் மகாராஜன் முன்னிலை வகித்தாா். அப்போது, ஓடைப்பட்டி பேரூராட்சியில் நடைபெற இருக்கும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விருப்பமுள்ளவா்கள் பலரும் விருப்ப மனுக்களை கொடுத்தனா். சின்னமனூா் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் நிவேதா அண்ணாத்துரை உள்பட பலரும் கலந்து கொண்டனா்.