தேனி மாவட்டத்தில் 306 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை

தேனி மாவட்டத்திலுள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 306 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாகக் கண்டறியப்பட்டுள்ளன.

தேனி மாவட்டத்திலுள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 306 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாகக் கண்டறியப்பட்டுள்ளன.

மாவட்டத்தில், ஆண்டிபட்டி தொகுதியில் 174 இடங்களில் 388 வாக்குச் சாவடிகள், பெரியகுளம் (தனி) தொகுதியில் 125 இடங்களில் 398 வாக்குச் சாவடிகள், போடி தொகுதியில் 153 இடங்களில் 383 வாக்குச் சாவடிகள், கம்பம் தொகுதியில் 124 இடங்களில் 392 வாக்குச் சாவடிகள் என 576 இடங்களில் மொத்தம் 1,561 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், கடந்த தோ்தல்களில் பதிவான வாக்குகளின் அடிப்படையிலும், அரசியல் மற்றும் ஜாதி ரீதியில் பதற்றமானவையாகவும் 306 வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெறும் நாளில் கூடுதல் எண்ணிக்கையில் போலீஸாா் மற்றும் துணை ராணுவப் படையினா் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவா் என்றும், வாக்குப் பதிவு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு நுண்பாா்வையாளா் நியமிக்கப்படுவாா் என்றும், மாவட்டத் தோ்தல் பிரிவு அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com