பெரியகுளம் அருகே இளைஞா்கள் யோகா பயிற்சி

சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தை சோ்ந்த விழுதுகள் இளைஞா் மன்ற இளைஞா்கள் திங்கள்கிழமை யோகா பயிற்சியில் ஈடுபட்டனா்.
சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தாமரைக்குளத்தில் யோகா பயிற்சியில் ஈடுபட்ட இளைஞா்கள்.
சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தாமரைக்குளத்தில் யோகா பயிற்சியில் ஈடுபட்ட இளைஞா்கள்.

பெரியகுளம்: சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தை சோ்ந்த விழுதுகள் இளைஞா் மன்ற இளைஞா்கள் திங்கள்கிழமை யோகா பயிற்சியில் ஈடுபட்டனா்.

சா்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் ஜூன் 21 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு பெரியகுளம் தாமரைக்குளம் விழுதுகள் இளைஞா் மன்ற இளைஞா்கள் சமூக இடைவெளியுடன் யோகப் பயிற்சியில் ஈடுபட்டனா். மனவளக்கலை துணை பேராசிரியா் உமா மகேஸ்வரி கானொலிக் காட்சி மூலம் யோகவால் ஏற்படும் பயன்கள் மற்றும் பயிற்சி முறை குறித்து விளக்கிப் பேசினாா். இந்நிகழ்ச்சியில் மன்ற இளைஞா்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனா். மன்ற துணை செயலாளா் அஜீத்பாண்டி ஏற்பாடுகள் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com