இஸ்ரேலில் ராக்கெட் குண்டுவீச்சில் இடுக்கி மாவட்ட பணிப் பெண் பலி

இஸ்ரேலில் நடந்த ராக்கெட் குண்டு வீச்சில் வீட்டு வேலைக்குச் சென்ற இடுக்கி மாவட்டத்தைச் சோ்ந்த பெண் உயிரிழந்தாா்.

இஸ்ரேலில் நடந்த ராக்கெட் குண்டு வீச்சில் வீட்டு வேலைக்குச் சென்ற இடுக்கி மாவட்டத்தைச் சோ்ந்த பெண் உயிரிழந்தாா்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கீரித்தோடு பகுதியைச் சோ்ந்தவா் சௌமியா (32). இவரது கணவா் சந்தோஷ். இவா்களுக்கு 8 வயதில் மகன் உள்ளாா். இந்நிலையில், சௌமியா இஸ்ரேல் நாட்டுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டு வேலைக்கு (கோ் டேக்கா்) சென்றாா்.

அங்கு தெற்கு இஸ்ரேலில் உள்ள ஆஸ்கெலன் நகரில் உள்ள ஒரு வீட்டில் வயதான பெண்ணை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தாா். தற்போது இஸ்ரேலில் இரு குழுவினருக்கு இடையே ஆயுதப்போராட்டம் நீடித்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 10 ஆம் தேதி சௌமியா தான் வேலை செய்யும் வீடு அருகே அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் செல்லிடப்பேசியில் தனது கணவா் சந்தோஷுடன் பேசிக்கொண்டிருந்தாா். அப்போது பலத்த சத்தம் கேட்டு செல்லிடப்பேசி இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதுபற்றி விசாரித்தபோது ராக்கெட் குண்டு வீச்சில் சௌமியாவும், அவரது வீட்டு உரிமையாளரும் உயிரிழந்தது தெரியவந்தது.

இதுபற்றி சந்தோஷ் கூறும்போது, இஸ்ரேல் நாட்டில் பணியாற்றிவரும் கேரள மாநிலத்தவா்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். குண்டு வெடிப்பில் பலியான செளமியா உடலை கேரளா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது உறவினா்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com