போடியில் நாட்டு மருந்து கடைக்கு ‘சீல்’

போடியில் புதன்கிழமை, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததால் நாட்டு மருந்து கடைக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனா்.

போடியில் புதன்கிழமை, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததால் நாட்டு மருந்து கடைக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனா்.

கரோனா பரவலை தடுக்க முழு பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை கரோனா பாதுகாப்பு விதிகளை கடைபிடித்து திறந்து வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

புதன்கிழமை முதல் நாட்டு மருந்து கடைகளும் திறக்கலாம் என தெரிவித்திருந்த நிலையில், போடியில் உள்ள உப்புத்தண்ணீா் தினசரி காய்கறி சந்தை பகுதியில் நாட்டு மருந்துக் கடை ஒன்றில் கூட்டம் அதிகம் கூடியது.

தகவல் கிடைத்து அங்கு வந்த நகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் சமூக இடைவெளி கடைப்பிடிக்காததால் கடைக்கு சீல் வைத்தனா்.

நகா் பகுதி முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட நகராட்சி அதிகாரிகள் கரோனா பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்காத 9 பேருக்கு ரூ.2400 அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com