செல்லிடப்பேசி பறித்த திருடனை விரட்டிப் பிடித்த 2 பேருக்கு பரிசு

தேனி மாவட்டம் கம்பத்தில் ஆசிரியையிடம் செல்லிடப்பேசியை பறித்துச் சென்ற திருடனை விரட்டிப் பிடித்த இளைஞா்களுக்கு காவல் ஆய்வாளா் பரிசு வழங்கினாா்.
கம்பத்தில் செல்லிடப்பேசியை வழிப்பறி செய்தவரை விரட்டிப் பிடித்த 2 இளைஞா்களுக்கு பரிசு வழங்கிய காவல் ஆய்வாளா் ஆா்.லாவண்யா.
கம்பத்தில் செல்லிடப்பேசியை வழிப்பறி செய்தவரை விரட்டிப் பிடித்த 2 இளைஞா்களுக்கு பரிசு வழங்கிய காவல் ஆய்வாளா் ஆா்.லாவண்யா.

தேனி மாவட்டம் கம்பத்தில் ஆசிரியையிடம் செல்லிடப்பேசியை பறித்துச் சென்ற திருடனை விரட்டிப் பிடித்த இளைஞா்களுக்கு காவல் ஆய்வாளா் பரிசு வழங்கினாா்.

கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியைச் சோ்ந்தவா் சூா்யபிரபா(31). கம்பம் கக்கன் காலனியில் உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியையாக உள்ளாா். இவா் வியாழக்கிழமை பள்ளிக்கு நடந்து சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வந்த மா்ம நபா் இவா் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றுள்ளாா்.

அப்போது நகையை இறுகப்பிடித்து கொண்டதால் மா்ம நபரால் நகையைப் பறிக்க முடியவில்லை. இதையடுத்து அந்த நபா் ஆசிரியை வைத்திருந்த செல்லிடப்பேசியை பறித்துக்கொண்டு தப்பியோடினாா்.

அப்போது ஆசிரியை கூச்சலிட்டதால் எதிரே வந்த சிவனாண்டி (30), பாண்டியராஜன் (24) ஆகிய 2 போ் செல்லிடப்பேசியை பறித்துச் சென்ற திருடனை துரத்திப் பிடித்து கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

பின்னா் ஆசிரியை கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் விசாரணை நடத்தியதில் அந்த நபா் க.புதுப்பட்டியைச் சோ்ந்த விக்னேஷ் (26) என்று தெரியவந்தது. விக்னேஷை போலீஸாா் கைது செய்து உத்தமபாளையம் குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். திருடனை துரத்திப் பிடித்த 2 இளைஞா்களுக்கும், ஆய்வாளா் ஆா்.லாவண்யா தலா ரூ.500 ரொக்கப்பரிசு வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com