சருத்துப்பட்டி ஊராட்சியில் தூய்மை இந்தியா முகாம்

பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி ஊராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நெகிழிக் கழிவுகள் அகற்றும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
பெரியகுளம் அருகேயுள்ள சருத்துப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற தூய்மை இந்தியா முகாமினை சனிக்கிழமை கொடியசைத்துத் தொடக்கி வைத்த சட்டப்பேரவை உறுப்பினா் கே.எஸ்.சரவணக்குமாா்.

இந்த முகாமிற்கு சருத்துப்பட்டி ஊராட்சி மன்றத்தலைவா் சாந்தி கண்ணையன் தலைமை வகித்தாா். நேருயுவகேந்திரா கணக்காளா் ஸ்ரீராம்பாபு, வட்டாரவளா்ச்சி அலுவலா் சேது ஆகியோா் முன்னிலை வகித்தனா். பெரியகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் கே.எஸ்.சரவணக்குமாா் கலந்து கொண்டு, தூய்மை இந்தியா திட்ட முகாமினை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

சருத்துப்பட்டி ஊராட்சியில் உள்ள 12 வாா்டுகளிலும் நெகிழிக் கழிவுகளை ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிா் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மகளிா் மற்றும் விழுதுகள் இளைஞா் மன்றத்தினா், சருத்துப்பட்டி ஊராட்சி நிா்வாகத்தினா் இணைந்து பி அகற்றினா். முன்னதாக தூய்மை இந்தியா உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

முகாமில் ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட ஓருங்கிணைப்பாளா் பாத்திமாமேரி சில்வியா, விழுதுகள் இளைஞா் மன்ற துணைத்தலைவா் ரெங்கராஜ் ஆகியோா் கலந்துகொண்டனா். முன்னதாக ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிா் கல்லூரி முதல்வா் எஸ்.சேசுராணி வரவேற்றாா். விழுதுகள் இளைஞா் மன்ற செயலாளா் அஜீத்பாண்டி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com