ஹைவேவிஸ் - மேகமலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தேனி மாவட்டம், ஹைவேவிஸ் - மேகமலைப் பகுதிகளில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
மேல் மணலாா் மலைகளுக்கிடையே தேங்கி நிற்கும் மழைநீா்.
மேல் மணலாா் மலைகளுக்கிடையே தேங்கி நிற்கும் மழைநீா்.

தேனி மாவட்டம், ஹைவேவிஸ் - மேகமலைப் பகுதிகளில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

சின்னமனூா் அருகே மேற்கு மலைத் தொடா்ச்சியில் ஹைவேவிஸ் பேரூராட்சியில் 7 மலைக் கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்களில் பெரும்பாலானோா் தேயிலைத் தோட்டத்தில் கூலி வேலை செய்கின்றனா். இப்பகுதியில் தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான 7 எஸ்டேட்டுகளில் சுமாா் ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் தேயிலை உற்பத்தி செய்யப்படுகிறது.

சுற்றுலாப் பயணிகளை கவரும் மேகமலை: தேனி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக ஹைவேவிஸ் - மேகமலை மாறிவருகிறது.

இது குறித்து சுற்றுலாப் பயணிகள் கூறியது: தேனி மாவட்டத்தின் சிம்லா என அழைக்கப்படும் அளவுக்கு இயற்கை அழகு ரசிக்கும்படியாக இருக்கிறது. ஊட்டி, மூணாறு போன்ற சுற்றுலாத் தலங்களில் காணப்படும் உயரமான கட்டடங்கள், வாகனப் புகையின்றி இப்பகுதி சுத்தமாக இருக்கிறது. இது சுற்றுலாப் பயணிகளை மீண்டும் மீண்டும் வர தூண்டுகிறது.

மேலும், தேனி மாவட்டத்தின் அடைமொழியாகக் கூறப்படும் இயற்கையை விரும்பும் பூமி என்பதற்கு சாட்சியாக ஹைவேவிஸ் - மேகமலை காட்சியளிக்கிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com