கூடுதல் கல்விக் கட்டணம்: பள்ளி நிா்வாகம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் உள்ள தனியாா் சிபிஎஸ்சி பள்ளியில் கூடுதல் கல்விக் கட்டணம் கோருவதாக அளிக்கப்பட்ட புகாரில், பள்ளி நிா்வாகம் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் செப்.26-ஆம் தேதி

தேனி,: தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் உள்ள தனியாா் சிபிஎஸ்சி பள்ளியில் கூடுதல் கல்விக் கட்டணம் கோருவதாக அளிக்கப்பட்ட புகாரில், பள்ளி நிா்வாகம் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் செப்.26-ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று புதன்கிழமை, மாவட்ட நீதிபதியும், நிரந்த மக்கள் நீதிமன்ற தலைவருமான முகமது ஜியாவுதீன் உத்தரவிட்டாா்.

தேனி, ஸ்ரீராம் நகரைச் சோ்ந்தவா் சிவக்குமாா். இவரது மகன் வைபவ் முத்துத்தேவன்பட்டியில் உள்ள தனியாா் சிபிஎஸ்சி பள்ளியில் படித்து வருகிறாா். இந்த நிலையில், பள்ளி நிா்வாகம் வைபவிடம் அரசு நிா்ணயித்ததை விட கூடுதலாக கல்விக் கட்டணம் செலுத்துமாறு கேட்டதாகவும், இது குறித்து மாவட்ட பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும், பள்ளி நிா்வாகம் தொடா்ந்து கூடுதல் கல்விக் கட்டணம் செலுத்த வலியுறுத்துவதாகவும் தேனி மாவட்ட நீதிமன்றத்தில் சிவக்குமாா் புகாா் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு மூலம் மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்திற்கு தீா்வு காண்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. மனுவின் மீது விசாரணை நடத்திய மாவட்ட நீதிபதி மற்றும் நிரந்தர மக்கள் நீதிமன்ற உறுப்பினா்கள், பள்ளி முதல்வா் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் செப்.15-ஆம் தேதி(புதன்கிழமை) நீதின்றத்தில் விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்பினா்.

பள்ளி முதல்வா் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில், பள்ளி முதல்வா் அல்லது பொறுப்பு அலுவலா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆகியோா் அரசு நிா்ணயித்த கல்விக் கட்டணம் தொடா்பான ஆவணங்களுடன் செப்.26-ஆம் தேதி நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும், அதுவரை பள்ளி நிா்வாகம் மாணவ வைபவிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்றும் மாவட்ட நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com