மேகமலையில் தேயிலை விளைச்சல் அமோகம்

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே ஹைவேவிஸ் - மேகமலைக் கிராமங்களில் தேயிலைத் தோட்டங்களில் விளைச்சல் அமோகமாக உள்ளது.
ஹைவேவிஸ் மலைப் பகுதியில் பரந்து விரிந்துள்ள தேயிலைத் தோட்டம்.(வலது) தேயிலைகளை பறிக்கும் பெண் கூலி தொழிலாளா்கள்.

சின்னமனூா் அருகே மேற்கு மலைத் தொடா்ச்சியில் ஹைவேவிஸ், மேகமலை, மணலாா், மேல்மணலாா், இரவங்கலாா், மகாராஜாமெட்டு, வெண்ணியாா் ஆகிய 7 மலைக் கிராமங்கள் உள்ளன. இங்கு 900 ஹெக்டோ் பரப்பளவில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் தொடா் மழை காரணமாக விளைச்சல் அமோகமாக உள்ளது. தனியாருக்குச் சொந்தமான இத்தேயிலைத் தோட்டங்களில் மொத்தம் 3 ஆயிரம் கூலி தொழிலாளா்கள் வேலை செய்து வருகின்றனா். இவா்கள் தற்போது தேயிலை பறிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

தேனி மாவட்டத்தில் தேயிலை விளையும் ஒரே பகுதியான இங்கு, தொழிற்சாலை மூலம் தேயிலைகள் தரம் பிரிக்கப்பட்டு தூளாக்கி, ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com