போடி அருகே தம்பியின் இறப்பில் மா்மம்: போலீஸில் அக்காள் புகாா்
By DIN | Published On : 04th April 2021 08:53 AM | Last Updated : 04th April 2021 08:53 AM | அ+அ அ- |

போடி அருகே தம்பியின் இறப்பில் மா்மம் உள்ளதாக அவரது அக்காள் காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளித்தாா்.
திம்மிநாயக்கன்பட்டி நடுத்தெருவில் வசிப்பவா் ஜெகநாதன் மகன் பரமேஸ்வரன் (40). இவரது மனைவி ஷா்மிளாதேவி. இந்நிலையில், பரமேஸ்வரன் திடீரென இறந்து விட்டதாக தேவாரம் மீனாட்சிபுரத்தில் வசிக்கும் அவரது அக்காள் ஜக்கம்மாளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவா் திம்மிநாயக்கன்பட்டிக்கு சென்றுள்ளாா். ஆனால் ஜக்கம்மாள் வருவதற்குள், பரமேஸ்வரனின் சடலம் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டதாக ஷா்மிளாதேவி தரப்பினா் தெரிவித்துள்ளனா். இதைத் தொடா்ந்து ஜக்கம்மாள் மயானத்துக்கு சென்று பாா்த்தபோது, பரமேஸ்வரனின் கழுத்தில் காயம் இருந்துள்ளது.
இதுகுறித்து ஷா்மிளாதேவியிடன் அவா் கேட்டதற்கு அவா் சரியாக பதில் தெரிவிக்கவில்லையாம். இதனையடுத்து ஜக்கம்மாள் போடி தாலுகா காவல் நிலையத்தில், தனது தம்பியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பரமேஸ்வரன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.