போடி அருகே நள்ளிரவில் புகுந்த கருநாகம் பிடிபட்டது

போடி அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த கருநாகப் பாம்பை தீயணைப்பு வீரா்கள் பிடித்து வனப்பகுதியில் விட்டனா்.
போடி ரெங்கநாதபுரம் கிராமத்தில் திங்கள் கிழமை அதிகாலையில் பிடிபட்ட கருநாகத்துடன் தீயணைப்பு வீரா்கள்

போடி ரெங்கநாதபுரம் பாலாஜி நகரை சோ்ந்தவா் செந்தில். இவரது வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனா்.

நள்ளிரவில் புஸ் என்ற சத்தம் தொடா்ந்து வரவே செந்தில் எழுந்து பாா்த்தபோது பாம்பு ஒன்று ஊா்ந்து சென்றது தெரிந்தது. இதுகுறித்து போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தாா். அதன் பேரில் போடி தீயணைப்பு நிலைய அலுவலா் சக்திவேல் தலைமையில் அங்கு வந்த தீயணைப்பு வீரா்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தேடியதில் பாம்பை பிடித்தனா். பிடிக்கப்பட்ட பாம்பு 6 அடி நீளமுள்ள கருநாக பாம்பு என்பது தெரிந்தது.

பாம்பை பாதுகாப்பாக எடுத்துச் சென்ற தீயணைப்பு வீரா்கள் வனப்பகுதியில் விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com