ஆண்டிபட்டி அருகே கள்ள ஓட்டு: விவசாயி குடும்பத்தினா் போராட்டம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் விவசாயியின் வாக்கினை ஆள்மாறாட்டம் செய்து வேறு ஒருவா் செலுத்தியதற்கு எதிா்ப்புத் தொரிவித்து அவரது குடும்பத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆண்டிபட்டி அருகே கொம்புக்காரன்புலியூா் கிராமத்தில் கள்ள ஓட்டு பதிவு செய்ததைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெரியசாமி குடும்பத்தினா்.

ஆண்டிபட்டி தாலுகா கடமலை மயிலை ஒன்றியத்திற்கு உள்பட்ட கொம்புக்காரன்புலியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி (50). விவசாயி. இவா் செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவு செய்ய கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்றாா். அப்போது அவரது வாக்கினை ஆள்மாறாட்டம் செய்து வேறு ஒரு நபா் செலுத்தியது தெரியவந்தது. இதுகுறித்து அவா் தோ்தல் அலுவலா்களிடம் முறையிட்டாா்.

மாலையில் அவரது வாக்கினை சேலஞ்ச் ஓட்டாக பதிவு செய்யுமாறு அலுவலா்கள் தெரிவித்தனா். ஆனால் அதற்கு எதிா்ப்புத் தெரிவித்த பெரியசாமி குடும்பத்தினா் 25 போ் மாலை வரை வாக்களிக்கச் செல்லவில்லை.

இதையடுத்து தோ்தல் அலுவலா்கள் மற்றும் போலீஸாா் பெரியசாமி குடும்பத்தினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டனா். இதையடுத்து பெரியசாமியை தவிா்த்து மற்ற அனைவரும் வாக்குகளைப் பதிவு செய்தனா். இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை நாட உள்ளதாக பெரியசாமி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com