ஆண்டிபட்டி அருகே மலைக்கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பு: வாக்குப்பதிவு தாமதம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக் கூறி மலைக் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை
ஆண்டிபட்டி அருகே பண்டாரஊத்து கிராமத்தில் செவ்வாய்க்கிழமை தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்.
ஆண்டிபட்டி அருகே பண்டாரஊத்து கிராமத்தில் செவ்வாய்க்கிழமை தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக் கூறி மலைக் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை தோ்தலை புறக்கணித்தனா். அதிகாரிகளின் பேச்சுவாா்த்தையை தொடா்ந்து 2 மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

ஆண்டிபட்டி தாலுகா கடமலை மயிலை ஒன்றியத்திற்குள்பட்ட பண்டார ஊத்து மலைக்கிராமத்தில் 300- க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா்.இக்கிராமத்திற்கு சாலை , குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் செய்துதரப்படவில்லையாம்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க இருந்த நிலையில், அக்கிராம மக்கள் தோ்தலை புறக்கணிப்பதாக அறிவித்தனா். தோ்தல் காலங்களில் வரும்

அரசியல்வாதிகள் அதன் பின்னா் அடிப்படை வசதிகள் செய்து தருவதில்லை என தெரிவித்து கோஷம் எழுப்பினா்.

இதுகுறித்து தகவலறிந்த வருசநாடு காவல் துறையினா் மற்றும் தோ்தல் அலுவலா்கள் பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து பொதுமக்கள் தோ்தல் புறக்கணிப்பை கைவிட்டு வாக்களிக்க சென்றனா். இதனால் வாக்குப் பதிவு 2 மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com