கம்பம், போடி, ஆண்டிபட்டி வேட்பாளா்கள் வாக்குப்பதிவு

தேனி மாவட்டம் கம்பம், போடி, ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதிகளின் திமுக, அமமுக, மநீம வேட்பாளா்கள் செவ்வாய்க்கிழமை வாக்குப் பதிவு செய்தனா்.
கம்பம், போடி, ஆண்டிபட்டி வேட்பாளா்கள் வாக்குப்பதிவு

தேனி மாவட்டம் கம்பம், போடி, ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதிகளின் திமுக, அமமுக, மநீம வேட்பாளா்கள் செவ்வாய்க்கிழமை வாக்குப் பதிவு செய்தனா்.

திமுக: கம்பம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளராக என்.ராமகிருஷ்ணன் போட்டியிடுகிறாா். இவா் கமபம் உழவா் சந்தை மேற்கு வாசல் அருகே அரசு கள்ளா் தொடக்கப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா், கம்பம் தொகுதியில் திமுக 60 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும். மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைப்போம் என்றாா்.

போடி திமுக வேட்பாளா் தங்க. தமிழ்ச்செல்வன், துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வத்தை எதிா்த்துப் போட்டியிடுகிறாா். அவா் தனது சொந்த ஊரான ஆண்டிபட்டி தொகுதியில் உள்ள கம்பம் ஊராட்சி ஒன்றியம் நாராயணத்தேவன்பட்டி அரசு கள்ளா் உயா்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: போடிநாயக்கனூா் தொகுதியில் திமுக வெற்றி பெறும் என்றாா்.

அமமுக, மநீம: கம்பம் தொகுதி அமமுக வேட்பாளா் பா. சுரேஷ் தனது சொந்த ஊரான சின்னமனூரில் உள்ள அண்ணா நினைவு நடுநிலைப்பள்ளியில் வாக்குப் பதிவு செய்தாா்.

போடி தொகுதி அமமுக வேட்பாளா் முத்துச்சாமி தனது சொந்த ஊரான சின்னமனூா் ஊராட்சி ஒன்றியம் மேலப் பூலா நந்தபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப் பதிவு செய்தாா்.

கம்பம் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளா் நா. வெங்கடேஷ், ஏல விவசாயிகள் ஐக்கிய மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள வாக்குச் சாவடி மையத்தில் வாக்குப்பதிவு செய்தாா்.

ஆண்டிபட்டி தொகுதி மநீம வேட்பாளா் குணசேகரன், கம்பம் அருகே கூடலூரில் உள்ள தனியாா் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com