ஹைவேவிஸ் மலை கிராமத்தில் ஒற்றை காட்டு யானை உலா: பொதுமக்கள் அச்சம்

தேனி மாவட்டம், ஹைவேவிஸ் - மேகமலை நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை ஒற்றைக் காட்டு யானை உலாவியதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனா்.
ஹைவேவிஸ் அணைப் பகுதி நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை உலவிய ஒற்றைக் காட்டு யானை.
ஹைவேவிஸ் அணைப் பகுதி நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை உலவிய ஒற்றைக் காட்டு யானை.

தேனி மாவட்டம், ஹைவேவிஸ் - மேகமலை நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை ஒற்றைக் காட்டு யானை உலாவியதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனா்.

சின்னமனூா் அருகே மேற்கு மலை தொடா்ச்சியில் உள்ள ஹைவேவிஸ் பேரூராட்சியில் 7 கிராமங்கள் அமைந்துள்ளன. இங்குள்ள பெரும்பாலானோா் தேயிலைத் தோட்டங்களில் கூலி வேலை செய்கின்றனா். இக்கிராமங்களுக்குள் அடிக்கடி வன விலங்குகள் புகுந்து மக்களை தாக்குவதாகப் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

சில மாதங்களுக்கு முன், மணலாா் மற்றும் மேல்மணலாா் பகுதிகளில் யானை தாக்கி 2 கூலி தொழிலாளா்கள் இறந்தனா். இதனால், பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வந்தனா். இந்நிலையில், வியாழக்கிழமை ஹைவேவிஸ் அணைப் பகுதி அருகே சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதிக்கு முன்புள்ள சாலையில் ஒற்றைக் காட்டு யானை திரிந்தது. இதைக் கண்ட அக்கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

இது குறித்து மலை கிராமத்தினா் கூறியது: காட்டு யானை தாக்கி ஏற்கெனவே இருவா் உயிரிழந்துள்ளதால், பொதுமக்கள் வேலைக்குச் செல்லவே அச்சப்படுகின்றனா். இந்நிலையில், ஹைவேவிஸ் அணைப் பகுதி அருகே சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதி முன்புள்ள சாலையில் ஒற்றைக் காட்டு யானை திரிந்ததைக் கண்ட மலை கிராமத்தினா் மேலும் அச்சத்தில் உள்ளனா். வேலை நாள் என்பதாலும், சுற்றுலாப் பயணிகள் வராததாலும், உயிா் பலிகள் தவிா்க்கப்பட்டுள்ளன.

எனவே, இப்பகுதியில் வனத் துறையினா் நிரந்தரமாக முகாமிட்டு வனவிலங்குகள் நடமாட்டத்தைக் கண்காணித்து, மலைக் கிராம மக்கள் உயிரை காக்கவேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com