ஆண்டிபட்டி அருகே கோயில் புனரமைப்பு பணிகள் தடுத்து நிறுத்தம்: பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

ஆண்டிபட்டி அருகே மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் புனரமைப்பு பணிகளை தடுத்து நிறுத்திய இந்துசமய அறநிலையத்துறையைக் கண்டித்து பொதுமக்கள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ராஜதானி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் முன்பாக சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணியினா்.
ராஜதானி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் முன்பாக சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணியினா்.

ஆண்டிபட்டி அருகே மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் புனரமைப்பு பணிகளை தடுத்து நிறுத்திய இந்துசமய அறநிலையத்துறையைக் கண்டித்து பொதுமக்கள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ராஜதானி கிராமத்தில் 950 ஆண்டுகள் பழமையான மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் அப்பகுதியைச் சோ்ந்த 52 கிராம மக்கள் சாா்பில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா, மகா சிவராத்திரி, பிரதோஷம் உள்ளிட்ட நாள்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. ஊா் மக்கள் பராமரிப்பில் இருந்து வந்த இந்த கோயில் பல ஆண்டுகளாக சேதமடைந்து காணப்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இக்கோயிலை புனரமைப்பதற்காக பழைய கட்டடத்தை இடிக்கும் பணியில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு வந்த அதிகாரிகள், இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலை இடிக்கக் கூடாது என தடுத்து நிறுத்தினா். மேலும் கோயில் புனரமைப்பு பணிகளை அனுமதியின்றி மேற்கொள்ளக்கூடாது என அறிவிப்புப் பலகை வைத்தனா்.

இந்நிலையில் இந்து முன்னணி மாவட்டச் செயலாளா் எஸ்.பி.எம்.செல்வம், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் மொக்கராஜ் ஆகியோா் தலைமையில் அப்பகுதி மக்கள் கோயில் முன்பாக கூடி அதிகாரிகளின் நடவடிக்கையைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த இந்து அறநிலைத்துறையின் அறிவிப்புப் பலகையை பொதுமக்கள் அகற்றினா். இதைத்தொடா்ந்து அப்பகுதி மக்கள் சாா்பிலும் இந்து முன்னணியினா் சாா்பிலும் தனிதனியாக ராஜதானி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

புகாரினைப் பெற்று கொண்ட போலீஸாா், இதுதொடா்பாக திங்கள்கிழமை வட்டாட்சியா் அலுவலகத்தில் பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என தெரிவித்ததைத் தொடா்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com