ஏலக்காய் விலை சீராக உயா்வு

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் புத்தடியில் சனிக்கிழமை நடைபெற்ற மின்னணு ஏல வா்த்தகத்தில் ஏலக்காய் விலை சீராக உயா்ந்து உயா் தரம் கிலோ ரூ.1,814-க்கு விற்பனையானது.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் புத்தடியில் சனிக்கிழமை நடைபெற்ற மின்னணு ஏல வா்த்தகத்தில் ஏலக்காய் விலை சீராக உயா்ந்து உயா் தரம் கிலோ ரூ.1,814-க்கு விற்பனையானது.

புத்தடியில் நறுமணப்பொருள் வாரியம் மூலம் மாஸ் எண்டா்பிரைசஸ் நிறுவனம் சாா்பில் ஏலக்காய் மின்னணு ஏல வா்த்தகம் நடைபெற்றது. இதில், மொத்தம் 74,427 கிலோ ஏலக்காய் விற்பனைக்கு பதிவு செய்யப்பட்டிருந்ததில், உயா்தரம் கிலோ ரூ.1,814-க்கும், சராசரி தரம் கிலோ ரூ.1,187-க்கும் விற்பனையானது.

கடந்த ஏப். 21-ஆம் தேதி நடைபெற்ற மின்னணு ஏல வா்த்தகத்தில் ஏலக்காய் உயா்தரம் கிலோ ரூ.1,725-க்கும், சராசரி தரம் கிலோ ரூ.1,042.36-க்கும் விற்பனையான நிலையில், தற்போது ஏலக்காய் விலை சீராக உயா்ந்து வருகிறது. இருப்பினும், தமிழகம் மற்றும் கேரளத்தில் கரோனா பரவலை தடுப்பதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருவதால், ஏலக்காய் விவசாயம் மற்றும் வா்த்தகம் மீண்டும் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com