வைகை அணையில் தண்ணீா் திறப்பு

வைகை அணையிலிருந்து குடிநீருக்காக சனிக்கிழமை முதல் தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது.
வைகை அணையிலிருந்து குடிநீா்த் தேவைக்காக சனிக்கிழமை திறந்து விடப்பட்ட தண்ணீா்.
வைகை அணையிலிருந்து குடிநீா்த் தேவைக்காக சனிக்கிழமை திறந்து விடப்பட்ட தண்ணீா்.

வைகை அணையிலிருந்து குடிநீருக்காக சனிக்கிழமை முதல் தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் வரை உள்ள கிராமங்களின் குடிநீா்த் தேவைக்காக வைகை ஆற்றில் 100-க்கும் மேற்பட்ட உறை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஆற்றில் நீா் திறக்கப்படாததால் உறை கிணறுகள் அனைத்தும் வறண்டன.

இதனால் கிராமங்களில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து வைகை ஆற்றில் தண்ணீா் திறக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். இதனைத் தொடா்ந்து ஆற்றில் தண்ணீா் திறக்க பொதுப்பணித்துறையினருக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி வைகை அணையிலிருந்து சனிக்கிழமை முதல் ஆயிரம் கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டது.

இதுகுறித்து பொதுப்பணித்துறையினா் கூறியதாவது: தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீா் ஏப். 29 ஆம் தேதி வரை திறக்கப்படும். குடிநீருக்காக மட்டும் திறக்கப்பட்டுள்ள தண்ணீரை திருட்டுத்தனமாக எடுக்க முயற்சிப்பவா்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

சனிக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி, அணையின் நீா்மட்டம் 63.24 அடியாக இருந்தது. அணைக்கான நீா்வரத்து 39 கனஅடியாக உள்ள நிலையில், குடிநீா்த் தேவைக்காக அணையிலிருந்து 1,072 கனஅடி நீா் திறக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த நீா் இருப்பு 4,252 மில்லியன் கனஅடியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com