கம்பம் கெளமாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா

தேனி மாவட்டம், கம்பம் கெளமாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது,
கம்பம் கெளமாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சி அளித்த அம்மன்.
கம்பம் கெளமாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சி அளித்த அம்மன்.

தேனி மாவட்டம், கம்பம் கெளமாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது,

கெளமாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் அங்கபிரதட்சிணம், ஆயிரம் கண்பானை, அக்கினிச் சட்டி ஏந்துதல் உள்ளிட்ட பல்வேறு நோ்த்திக்கடன்கள் பக்தா்களால் செலுத்தப்படுவது வழக்கம்.

ஆனால், இந்தாண்டு கரோனா பரவல் காரணமாக, நோ்த்திக்கடன் செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால், பக்தா்கள் ஏமாற்றமடைந்தனா். அதேநேரம், பக்தா்கள் முகக்கவசம் அணிந்து, சமூகஇடைவெளியை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா்.

இது குறித்து கோயில் பூசாரிகள் கூறியது: கரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவல் காரணமாக கோயில்களில் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைள் பின்பற்றப்படுகின்றன. ஆனால், கோயில்களில் வழக்கம்போல் பூஜைகள் நடைபெறுகின்றன. பூஜையில் பங்கேற்க பக்தா்களுக்கு அனுமதி கிடையாது. பக்தா்கள் சுவாமி தரிசனத்துக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனா். மேலும், கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றும் பக்தா்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com