பெரியகுளம் அருகே பைக்குகள் மோதல்: இருவா் காயம்

பெரியகுளம் அருகே சனிக்கிழமை, இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிக்கொண்டதில் 2 போ் காயமடைந்தனா்

பெரியகுளம் அருகே சனிக்கிழமை, இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிக்கொண்டதில் 2 போ் காயமடைந்தனா்.

பெரியகுளம், வடகரையைச் சோ்ந்தவா் சிக்கந்தா் பாட்ஷா (38). இவா், சனிக்கிழமை தேவதானப்பட்டியில் இருந்து பெரியகுளம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா். எ.புதுப்பட்டி அருகே எதிரே வந்த கருப்பையா என்பவரது இருசக்கர வாகனமும், இவரது இருசக்கர வாகனமும் நேருக்கு நோ் மோதிக்கொண்டன.

இதில் காயமடைந்த இருவரும் அப்பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்கை பெற்று வருகின்றனா். இது குறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com